வாஸ்து

அனைவரையும் துவாரகா அஸோஸியேட் மூலம் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம் . இன்றைய கால கட்டத்தில் சில குற்றச்சாட்டுகள் வாஸ்து மீது வைக்கப்படுகிறது.

வாஸ்து என்பது உண்மை இல்லை …..        வாஸ்து என்று கூறி ஏமாற்றுகிறார்கள் ………..

வாஸ்து என்பதே பொய் …..                     வாஸ்துவால் பண விரையம் ஆகிறது…….

இவை எல்லா குற்றச்சாட்டுக்கும் ஒரே பதில் வாஸ்து என்பது உண்மை ….வாஸ்து என்பது அறிவியல் ….

வாஸ்து என்பது ஒன்றும் மாயாஜால வித்தை அல்லஅது ஒரு அறிவியல் சார்ந்த உண்மை. அந்த உண்மையை உங்களுக்கு தெளிவு படுத்துவதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.

வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம்..

“வாஸ்து” என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.
வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப்பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும்.

வாஸ்து சாஸ்திரம்…

வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், உருக்காலும், கொங்கிறீற்றாலும் கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை. வாஸ்து புருஷ மண்டலமும், வாஸ்து புருஷனும் கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். 

 வாஸ்து புருஷன் ..

இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப் படுத்துகின்றது. இந்த உருவகம் குறியீட்டு வடிவில் தரப்படும்போது, வடகிழக்கில் தலையும், தென் மேற்கில் காலும் இருக்க வாஸ்து புருஷ மண்டலத்தைக் குப்புறப் படுத்தபடி ஆக்கிரமித்திருக்கும் ஒரு ஆண் உருவமாக வாஸ்து புருஷன் விபரிக்கப்படுகிறான்.