எங்களைப் பற்றி

துவாரஹா அசோசியேட் கடந்த 25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம், மனையடி சாஸ்திரம், சோடச மனைபொருத்தம் மற்றும் கட்டிடக் கலையில் சிறந்து முன்னனியில் உள்ள ஆலோசகராக துவாரஹா அசோசியேட் என்ற நிறுவனத்தை அமைத்து பல இடங்களில் நிறைந்த எண்ணிக்கையில் திருத்தியான வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வருகிறதை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். துவாரஹா அசோசியேட் மிகுந்த ஈடுபாட்டுடன் வாஸ்து சாஸ்திரா, மனையடி சாஸ்திரா, சோடசமனைப்பொருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளித்து , வேதகால நாகரீக அடிப்படையிலும், பஞ்ச பூத தத்துவத்தின் அடிப்படையிலும் கட்டிடங்களை அமைத்து தருகிறோம்.
வாஸ்து சாஸ்திர அடிப்படையில் கட்டப்படாத கட்டிடங்களிலும் எளிய, சிறிய மாற்றங்களை செய்வதின் மூலம் வாஸ்து சாஸ்திரத்தின் முழு பலனையும் பெற்றுத் தருகிறோம். பழமை வாய்ந்த வேதகால நாகரீகத்தின் அடிப்படையில் உருவான வாஸ்து சாஸ்திரத்தையும் பஞ்ச பூதங்களின் தத்துவத்தின் நன்மை, தீமைகளையும மனதில் கொண்டு எங்களால் கட்டித்தரப்படும் வீடு, உணவகம், மருத்துவமனை மற்றும் ஆலயம் ஆகியவை அமைதியும், செழிப்பும் பெற்று விளங்குகின்றன. குடியிருப்பு, வணிக வளாகம் மற்றும் அனைத்து கட்டிடங்களுக்கும் வாஸ்து குறையிருப்பின் அப்பிரச்சனைகளின் தீர்வுக்கு நியமான கட்டணங்களில் ஆலோசனைகளை வழங்கும் பணியும் எங்களால் செய்யப்படுகிறது.

Leave a Comment