மனையடி சாஸ்திரம்
“மனை” என்பதற்கு வீடு என்றும் “சாஸ்திரம்” என்றால் மனை அமையவேண்டிய ஒழுங்குமுறைக்கு சாஸ்திரா என்றும் பொருள்படும். மனையின் உள் , வெளி அளவுகளுடன் அதற்குண்டான பலன்களைக் கூறுவது. வீட்டின் ஓர் அறைபோல் , சோடசத்தின் ஒரு பகுதியே மனையடி சாஸ்திரம். மனையானது சாஸ்திர முறைப்படி ஒரு குறிப்பிட்ட நீள அகலத்தைக் கொண்டு அமைக்கப்பட வேண்டும். மேலும் அம்மனையில் கட்டப்படும் அறைகளும் அவ்வாறே சாஸ்திரப்படி சில குறிப்பிட்ட நீள, அகலங்களைக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு சாஸ்திர விதிபடி கட்டப்படாத வீடுகள், கட்டிடங்கள் துன்பத்தையும் துயரத்தையும் தரும் என்பது சாஸ்திர விதி. சில வேறுபட்ட நீள, அகலங்களில் கட்டப்படும் வீடுகள் மட்டும் அறைகளில் நன்மை , தீமைகள் கீழ்க்கண்ட சில உதாரணங்கள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
6 அடி – அமைதியான வாழ்க்கை
7 அடி – செல்வத்தின் இழப்பு
8 அடி – மிகுந்த செல்வமும் வளமான வாழ்க்கையும்
9 அடி – செல்வத்தை இழப்பதோடு, மலைப்போன்ற துயரத்தை சந்திப்பார்கள்.
10அடி – குறைவில்லா வாழ்வு
11அடி – மிகுந்த ஆரோக்கியமும், செல்வமும்
12 அடி- குழந்தைகள் மரணம்
13 அடி- தீராத நோய்