கட்டிட திட்டங்கள் :
நாங்கள் எங்களது கட்டிடத்துரையில் பெற்ற அனுபவத்தையும், திறமையையும் நல்ல தரமான வீடுகளை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கட்டி தருவதற்கு பயன்படுத்துகிறோம். கட்டிடத்துரையில் மிகுந்த ஆராய்ச்சின் விளைவாக நாங்கள் பெற்ற கட்டிடத்துரை அறிவை நமது பாரம்பரிய வாஸ்து சாஸ்திரத்தில் பயன்படுத்தி மிகுந்த தொழில் நுணுக்கத்துடன் எங்களது வாடிக்கையாளர்களுக்கு வீடு, மற்றும் இதர கட்டிடங்களை கட்டுவதற்கு திட்டங்களை வடிவமைத்து தருகிறோம்.
வடிவமைப்பு திட்டங்கள் :
கட்டிட வரைப்படத்தில் குறிப்பிட்டுள்ள நீள, அகல அளவிற்கு ஏற்றபடி கட்டிடம் கட்ட கடக்கால் அமைக்கப்பட்ட பிறகு கட்டிடத்தை கட்டுவதற்கான லே-அவுட் மற்றும் பேஸ்லைன் அமைக்கும் பணியை நாங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப திருப்தியுடன் அமைத்து தருகிறோம்
என் கணிப்பு:
வீடு கட்ட துவங்கும் முன்பாக அவ்வீடுகட்டுவதற்கு உத்தேசமாக எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை அறிய ஒரு வரவு செலவு (Budget) திட்டத்தை தயாரித்தல் அவசியமாகும். வரவு செலவு திட்டம் (Budget) என்பது ஒரு உத்தேச மதிப்பீடுதான், இறுதியான மதிப்பீடு அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும், திட்டத்தின் மதிப்பீடு நாம் கட்டுகின்ற வீட்டின் அளவு மற்றும் கட்டிட அமைப்பைப் பொறுத்து வேறுப்படும். மேலும் வீடு கட்ட பயன்படுத்தும் பொருட்களின் தரத்தைப் பொறுத்தும், கட்டிட வேலை ஆரம்பித்த பிறகு செய்யப்படும் மாற்றங்களைப்பொறுத்தும் திட்ட மதிப்பீடு மாறுபடலாம். தங்களின் வீடு கட்டும் கனவு நிஜம் ஆவதற்கு முதல் படி தான் இந்த மதிப்பீடு. இச்சேவையை வாடிக்கையாளர்களின் பொருளாதார நிலைக்கேற்ப செய்து தருவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்
மதிப்பிடுதல் :
சொத்து பரிமாற்றத்தில் மதிப்பிடுதல் என்பது ஒரு முக்கிய அம்சம் ஆகும். நாங்கள் சொத்து மதிப்பீட்டு பணியை செவ்வனவே செய்து வருவதால் கோவை நகரில் பிரபலம் அடைந்துள்ளோம். சொத்து மதிப்பீட்டு பணியை மேற்கொள்வதின் மூலமாக சொத்து உரிமையாளர்கள் மற்றும் சொத்து வாங்குவோர் இவர்களின் சொத்தின் உண்மையான மதிப்பை அறிய வாய்ப்பு உள்ளது. இச்சேவையை நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறோம்
திட்டபணி ; கட்டிட ஆலோசகர் :
கட்டிட துறையில் பெற்றுள்ள மேலான அனுபவத்தின் அடிப்படையில் எங்களது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான வீடுகளையும், அடுக்கு மாடிகளையும், மற்றும் வணிகவளாகம் முதலியவற்றையும் அவர்களது விருப்பத்திற்கும், தேவைக்கும் ஏற்ப கட்ட ஆலோசனை வழங்குகிறோம். “Best One” என்று பாராட்டும்படி எங்களது வாடிக்கையாளர்களுக்கு வீடுகளை கட்ட ஆலோசனை வழங்குவதோடு மட்டும் அல்லாமல் வீட்டை கட்டியும் தருகிறோம். எங்களால் கட்டப்படும் வீடுகள் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட வரைப்படத்திற்கு ஏற்ப கட்டப்படுகிறது. எங்களால் கட்டப்படும் கட்டிடங்கள் நியாயமான விலையில் கட்டி தருவதுடன், வாடிக்கையாளர்களின் பணத்தையும், நேரத்தையும் சேமிக்கும் ஆலோசனையும் வழங்கும் உதவியும் செய்து வருகிறோம்
கட்டிடகலை வரைப்பட கலைஞர் : திட்டமிடுபவர் :
பெருகிவரும் மக்கள் கலை உணர்வு தேவைக்கு ஏற்ப நாங்கள் சிறந்த கட்டிட கலைஞர்களின் குழுக்கள் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். தற்காலத்தில் மாறிவரும் மக்களின் கலை உணர்வு மனப்போக்கிற்கு தீர்வாக எங்களது கலைக் குழுக்களால் கட்டிடங்களை அழகுபடுத்தும் கலைப் பணியை செய்துவருகிறோம்.
மற்றவை :
நாங்கள் கட்டிட சேவைப் பணியை செய்வதுடன், அதன் தொடர்புடைய வாஸ்து , மனையடி சாஸ்திரம், சோடச மனைப்பொருத்தம் ஆகிய சேவைகளையும் எங்களது வாடிக்கையாளர்களுக்கு செய்து தருகிறோம். வாஸ்து சாஸ்திரம் கட்டிடக்கலையின் தொழில்நுட்பத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. நீங்களும் உங்கள் வீட்டை வாஸ்து சாஸ்திர, சோடசமனை பொருத்தம் அடிப்படையில் கட்டி மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் வாழ வாழ்த்துகிறோம்.